சங்கர கந்தசாமி கண்டர் அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் அன்புமணி ராமதாஸ்.

பரமத்தி வேலூர் சங்கர கந்தசாமி கண்டார் அருங்காட்சியத்தை திறந்து வைக்கும் அன்புமணி ராமதாஸ்

Update: 2024-09-10 09:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்தி வேலூர், செ.10: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் நன்செய் இடையாறு சங்கர கந்தசாமி கண்டார் நூற்றாண்டு விழா நாளை கொண்டாடப்படுகிறது. விழாவின் துவக்கமாக 11ஆம் தேதி காலை 9 மணிக்கு நன்செய் இடையார் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் நன்செய் இடையாற்றில் சங்கர கந்தசாமி கண்டர் பொற்குடிலில் இருந்து நூற்றாண்டு விழா ஜோதி ஓட்டத்தை துவக்கி வைக்கிறார். பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமி கண்டத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நூற்றாண்டு விழா ஜோதியை கண்டர் அறநிலையத் தலைவர் சோமசுந்தரம் பெற்றுக் கொள்கிறார். விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கந்தசாமி கண்டார் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்து வைக்கின்றார். தொடர்ந்து பரிமள அரங்கில் நடைபெறும் விழாவிற்கு பள்ளியின் முன்னாள் மாணவர் ஓய்வு பெற்ற நீதிபதி சம்பந்தம் தலைமை வகிக்கின்றார். கந்தசாமி கண்ட அறநிலைய தலைவர் சோமசுந்தரம் சிறப்பு விருந்தினர்களை கௌரவிக்கின்றார்.மேலும் நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி,மருத்துவர் கே பி கே நெடுஞ்செழியன், முன்னாள் மாணவர்கள் வக்கீல் ரமேஷ்,பொன்.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Similar News