தொடக்கக்கல்வியை பாதுகாக்க வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம்
திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வியை பாதுகாக்க 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக் ) திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பாக 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் முரண்பாட்டை சரி செய்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும் ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்,ஆசிரியர் போட்டி தேர்வு அரசாணை 149 ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடியா திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.