இலுப்பூர் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இன்று நிறுத்தம். காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய் புதுக்கோட்டை அருகே பழுதடைந்துள்ளதால் இதனால் இன்று இலுப்பூர் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளுமாறு இலுப்பூர் தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.