திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள ஆழ்வார்நேரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கி பாண்டி(32). திருமணத்திற்கு பிளக்ஸ் பேனர் வைப்பதில் அவருக்கும் சன்னல் பட்டியை சேர்ந்தவர்களுக்கும் தகராறு இருந்தது. இதனை தொடர்ந்து இசக்கி பாண்டியை நான்கு பேர் கற்களால் தாக்கி விட்டு தப்பினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு வேலு, சுப்ரமணி ஆகிய இரண்டு பேரை ஏற்கனவே கைது செய்த நிலையில், நேற்று சங்கர், பிச்சு ராஜன் ஆகியோரை கைது செய்தனர்.