மணல்மேடு பஸ் ஸ்டாப் அருகே கணவன் - மனைவி சென்ற டூவீலர் அடையாளம் தெரியாத நபர் மீது மோதி விபத்து. மூன்று பேர் படுகாயம்.

மணல்மேடு பஸ் ஸ்டாப் அருகே கணவன் - மனைவி சென்ற டூவீலர் அடையாளம் தெரியாத நபர் மீது மோதி விபத்து. மூன்று பேர் படுகாயம்.

Update: 2024-09-12 11:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மணல்மேடு பஸ் ஸ்டாப் அருகே கணவன் - மனைவி சென்ற டூவீலர் அடையாளம் தெரியாத நபர் மீது மோதி விபத்து. மூன்று பேர் படுகாயம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம், கன்னிவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் வயது 52. இவரது மனைவி வெண்ணிலா வயது 42. இவர்கள் இருவரும் செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 9:30- மணி அளவில், திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மணல்மேடு பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அதே சாலையில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பாலசுப்பிரமணியன் தனது டூவீலரை வேகமாக இயக்கியதால், நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது மோதி விபத்து ஏற்பட்டு வாகனத்துடன் கீழே விழுந்தனர். இதில் பாலசுப்பிரமணியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல இவரது மனைவி வெண்ணிலாவுக்கு வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. மேலும், அடையாளம் தெரியாத நபருக்கு தலை மற்றும் முன் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த, கரூர் மாவட்டம், வெங்கமேடு, பெரிய குளத்துபாளையம், பட்டவன் கோவில் தெருவை சேர்ந்த கோகுல் வயது 25 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், விபத்தில் காயம் பட்ட கணவன்-மனைவி இருவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேபோல் அடையாளம் தெரியாத முதியவரை, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, இது தொடர்பாக பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Similar News