குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் சிறையில் அடைப்பு

அடைப்பு

Update: 2024-09-17 18:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடந்த ஏப்ரல் மற்றும் ஜீலை மாதங்களில் சின்னசேலம் மற்றும் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூண்டி மற்றும் திருப்பெயர் ஆகிய கிராமங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், திம்மலை கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் மகன் பெருமாள்(45) மற்றும் கண்ணன் மகன் சிவா(30) ஆகிய இருவரையும் 16.07.2024-ந் தேதி சின்னசேலம் காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்ற உத்தரவுப்படி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் இவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், இவர்கள் வெளியே வந்தால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கையில் தொடரந்து ஈடுபடுவார்கள் என்பதாலும் இவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, பரிந்துரையின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் த எம்.எஸ்.பிரசாந்த் மேற்படி இருவரையும் ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி கடலூர் மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு சார்வு செய்யப்பட்டது.

Similar News