வெறி நாய்கள் மற்றும் செந்நாய்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடாக ஆடுகளுக்கு தலா பத்தாயிரம் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-09-12 12:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் சேந்தமங்கலம் பகுதி கிளையில் உத்தரக்கிடி காவல் ஊராட்சிக்கு உட்பட்ட வெட்டுக்காடு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகளின் தோட்டங்களில் வெறி நாய்கள் அல்லது செந்நாய்கள் தொடர்ந்து ஆடுகளைக் கொன்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதை தடுக்க வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிளைச் செயலாளர் எம்.சக்திவேல் தலைமை வகித்தார்.போராட்டத்தில் கிளைத் தலைவர் கணபதி கிளை பொருளாளர் எஸ்.நடராஜன் உதவிச் செயலாளர் சாந்தி ராஜேந்திரன் உதவி தலைவர் தமிழ்வாணன் கமிட்டி உறுப்பினர்கள் வளர்மதி சத்தியஜோதி வரதராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பெருமாள் மாவட்ட உதவி செயலாளர் என்.ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியம் உத்தரக்கிடிகாவல் பேளுக்குறிச்சி திருமலைபட்டி காளப்பநாயக்கன் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை தொடர்ச்சியாக வெறி நாய்கள் செந்நாய்கள் கடித்து குதறி கொன்று விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெறிநாய் செந்நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்திடவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடாக ஆடுகளுக்கு தலா பத்தாயிரம் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் போராட்டத்தால் உத்திரக்கிடி காவல் ஊராட்சி வெட்டுக்காடு பகுதியில் வெறும் பரபரப்பான சூழல் காணப்பட்டது .போராட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Similar News