விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.! -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

86 வகையான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு, 2060 வெற்றியாளர்கள் ஒரு வட்டத்திற்கு என்ற விதத்தில் 16,560 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

Update: 2024-09-12 13:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா பரமத்தி பிஜிபி கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார்.மாநில பள்ளிகளில் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர், மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினர்.2024-25ம் கல்வி ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள் சுயநதி பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள், 86 வகையான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு, 2060 வெற்றியாளர்கள் ஒரு வட்டத்திற்கு என்ற விதத்தில் 16,560 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாமதிவேந்தன் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினர்.அப்போது நிகழ்ச்சியில் பேசிய
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
, மாணவர்கள் ஆரோக்கியமாகவும் கல்வியை சிறந்த முறையில் பெற வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளுக்கு உயர் முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. தன்னம்பிக்கை பயிற்சி கொடுப்பது விளையாட்டுகளே ஆகும். எனவே மாணவர்கள் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் கூறினார்.விழாவில் சிறப்புரையாற்றி பேசிய
மாநில வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன்,
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அவர்கள் கல்வியில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றனர். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை கல்வி உதவித்தொகை மற்றும் பல்வேறு திறன் பயிற்சி நிலையம் மாநில அரசு திறம்பட வழங்கி வருகிறது என்றும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் தனராசு, முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) (பொ) ரவி செல்வம், பிஜிபி பள்ளி தாளாளர் கணபதி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Similar News