ஊத்தங்கரை அருகே தாயின் உடல் உறுப்புகளை தானம் செய்த மகன்.
தாயின் உடல் உறுப்புகளை தானம் செய்த மகன்.
தாயின் உடல் உறுப்புகளை தானம் செய்த மகன். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வளத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது மனைவி முனியம்மாள்(45). இவருக்கு ஒரு மகன் உள்ளார், இந்த நிலையில் முனியம்மாள் காரப்பட்டு அடுத்த சின்னசாமி நகர் ஏரி அருகில் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது தன்னிச்சையாக எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து, பிறகு மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிசோதித்த மருத்துவர் அவருக்கு மூளை சாவு ஏற்பட்டதாக கூறினார் தொடர்ந்து அவரது மகன் நேதாஜி(19). தனது தாயின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக மருத்துவரிடம் கூறினார். தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அரசு மரியாதைகள் செலுத்தி தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அவரது உடலுக்கு மலர் தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர், சொந்த கிராமத்திற்கு அவரது உடல் அனுப்பி வைத்தனர். அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பாபு, சாமல்பட்டி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் வளத்தனூர் பொதுமக்கள் அவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அரசு மரியாதை உடன் அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மூளைச் சாவு அடைந்து தாய் உயிரிழந்த நிலையில், 19 வயதே ஆன அவரது மகன் தாயின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.