அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

போராட்டச் செய்திகள்

Update: 2024-09-13 03:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பொன்னமராவதி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஆர். தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் பாண்டிச்செல்வி, பிரகதாம்பாள், கோமதி, பாண்டியம்மாள், சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச்செயலர் மலர், சாலையோர வியாபாரிகள் சங்க ஒன்றிய செயலர் தீன், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சந்திரா, ஒன்றியப் பொருளாளர் சந்திரா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, குறைந்த பட்ச ஊதியமாக ஊழியர்களுக்கு ரூ. 26 ஆயிரம், உதவியாளர்களுக்கு ரூ. 25 ஆயி வழங்க வேண்டும். 10 ஆண்டுக பணி முடித்த அங்கன்வாடி ஊழியர்கள்ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, குறைந்த பட்ச ஊதியமாக ஊழியர்களுக்கு ரூ. 26 ஆயிரம், உதவியாளர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருக்கும் மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Similar News