அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்க வைத்து ஒட்டுமொத்த வியாபாரிகளையும் பாஜக அவமானப்படுத்தியுள்ளது- முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேட்டி

அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்க வைத்து ஒட்டுமொத்த வியாபாரிகளையும் பாஜக அவமானப்படுத்தியுள்ளது- முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேட்டி

Update: 2024-09-14 07:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்க வைத்து ஒட்டுமொத்த வியாபாரிகளையும் பாஜக அவமானப்படுத்தியுள்ளது திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டை அரசியலுக்காக நடத்துகிறார் முக்குலத்தோர் புலிப்படை தலைவர்-நடிகர்- கருணாஸ் பேட்டி மதுரையில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் சேது கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் மேற்க் கொள்ள உள்ளேன், தேசிய தலைவர்களின் வரலாறுகளை குறித்து கிராமம் கிராமாக சென்று பேச உள்ளேன், இளம் தலைமுறைக்கு தேசிய தலைவர்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை, முக்குலத்தோர் புலிப்படை அரசியல் கட்சி அல்ல, கல்வி அறக்கட்டளை, ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்ததால் எம்.எல்.ஏ ஆனேன், அறக்கட்டளை வாயிலாக இலங்கை அகதிகளின் குழந்தைகளை படிக்க வைத்து உள்ளேன், நான் வறுமையில் தான் இருக்கிறேன், ஆனாலும் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியை கட்டுகிறேன், ஜி.எஸ்.டி வரியை கொண்டு மக்களுக்கு திட்டங்களை செய்யவில்லை, அதானி, அம்பானிக்கான திட்டங்களை செய்கிறார்கள், அதானி, அம்பானிக்காக நான் உழைத்து வரி கட்ட வேண்டும் எனும் கேள்வி எழுகிறது, தொழில் அதிபர்களின் பிரதிநிதியாக அன்னபூர்ணா உரிமையாளர் ஜி.எஸ்.டி வரி குறைபாடுகள் குறித்து பேசியுள்ளார், கேள்வி கேட்டதற்க்காக அன்னபூர்ணா உரிமையாளர் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு உள்ளார், ஒட்டுமொத்த வியாபாரிகளையும் பாஜக அவமானப்படுத்தி உள்ளது, நாட்டின் பிரதமரே சமூக வலைதளம் வாயிலாக அரசியல் செய்து கொண்டு இருக்கிறார், தமிழகத்தில் பாஜக தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்தி உயர்க் கல்வியை ஏட்டாக் கனியாக மாற்ற நினைக்கிறது, தமிழகத்தில் பாஜக ஏமாற்று கூட்டமாக உள்ளது, பாஜகவின் சதி வலையில் மக்கள் சிக்கி கொண்டனர், எதிர்கால சந்ததிக்கு நீரையும், மண்ணையும் நாம் விட்டு செல்ல வேண்டும், தமிழக மீனவர்கள் எப்படி அந்நியர்களாக பார்க்கப்படுவது போல சொந்த மண்ணில் தமிழக மக்கள் அன்னியப்படுத்தலாம், இலங்கை படுகொலை போல தமிழகத்தில் படுகொலை நடக்கும், அன்னிய மாநில மக்கள் நம்மை அளிக்கலாம் எனும் ஐய்யமுள்ளது, விஜய் அரசியலுக்கு வரட்டும் பார்க்கலாம், பாமக சாதி கட்சி என்றால் விசிகவும் சாதி கட்சி தான், மது ஒழிப்பு மாநாட்டுக்கு அனைவரையும் அழைத்திருக்க வேண்டும், பொது சிந்தனையுடன் மது ஒழிப்பு மாநாடு நடத்தவில்லை, அரசியலுக்காக மது ஒழிப்பு மாநாட்டை திருமாவளவன் நடத்துகிறார், சாதி, மத அமைப்புகளுக்கு மாநாட்டில் அழைப்பு இல்லை என்றால் சாதி, மத அமைப்புகளுக்கு பொது சிந்தனை இருக்க கூடாதா?, தமிழக அரசியலில் யாரும் தனித்து நிற்க முடியாது, விஜய் எதிர்வரும் தேர்தலில் தனித்து நிற்க முடியாது" என கூறினார்.

Similar News