உடுமலையில் ஓணம் பண்டிகை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

பொதுமக்கள் குவிந்தனர்

Update: 2024-09-14 15:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கேரளா மாநிலத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்தது. அதன் படி மல்லிகை ரூ.500-ல் இருந்து ரூ. 2 ஆயிரமாகவும், முல்லை ரூ.200-ல் இருந்து ஆயிரமாகவும், சாதிப்பூ ரூ. 300-ல் இருந்து ரூ.600 ஆகவும்,சம்பங்கி ரூ.100-ல் இருந்து ரூ.200 ஆகவும்,கோழிக் கொண்டை ரூ.60-ல் இருந்து ரூ.100 ஆகவும்,செவ்வந்தி ரூ.150-ல் இருந்து ரூ.200 ஆகவும், பட்டன் ரோஸ் ரூ.150-ல் இருந்து ரூ.300 ஆகவும், கலர் செவ்வந்தி ரூ.200-ல் இருந்து ரூ.400 ஆகவும், 20 எண்ணிக்கை கொண்ட ரோஸ் கட்டு ரூ.160-ல் இருந்து ரூ.300 ஆகவும்,பன்னீர் ரோஸ் ரூ.150-ல் இருந்து ரூ.300 ஆகவும், செண்டு மல்லி ரூ.40-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்தது.கேரள மாநிலத்தின் ஓணம் பண்டிகையுடன் சேர்த்து சுபமுகூர்த்தம் நாளும் தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்

Similar News