திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் குடிமங்கலம் பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. மேலும் தாராபுரம் திருப்பூர் பல்லடம் ஒட்டன்சத்திரம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விற்பனைக்காக தக்காளி பழங்களை உடுமலைக்கு கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் உடுமலை பகுதியில் விளையும் தக்காளி பழங்களையும் உடுமலை நகராட்சி சந்தையில் விவசாயிகள் ஏலமுறையில் விற்பனை வருகின்றனர் கடந்த சில வாரங்களுக்கு முன் தக்காளி விலை சரிந்து 14 கிலோ கொண்டு பெட்டி 150 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆனது. தற்பொழுது ஓணம் பண்டிகை காரணமாக மறையூர் மூணாறு பகுதியைச் சேர்ந்த கேரளா விவசாய வியாபாரிகள் அதிக அளவு உடுமலை சந்தையில் குவிந்த காரணத்தால் இன்று 14 கிலோ பெட்டி 250 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்