காமராஜர் முழு உருவ வெண்கலச் சிலை: அமைச்சர் திறந்து வைத்தார்!
தூத்துக்குடியில் புதிதாக நிறுவப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் முழு உருவ வெண்கலச் சிலையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடியில் கிருஷ்ணராஜபுரம் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் சார்பில் நிறுவப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் முழு உருவ வெண்கலச் சிலையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், திமுக வட்ட செயலாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார், கோவில் தர்மகர்த்தா ஆறுமுகப்பாண்டியன், காரியதரிசி தங்ககுமார், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.