திருநெல்வேலி மாநகர மேலப்பாளையத்தில் உள்ள சாயன் தரகன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று ஏழு பவுன் நகை திருடு சென்றுள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மேலப்பாளையத்தில் நகை திருட்டு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க சமூக ஆர்வலர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.