கரூரில் மது போதையில் ஹோட்டல் கடலில் தகராறு செய்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு.

கரூரில் மது போதையில் ஹோட்டல் கடலில் தகராறு செய்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு.

Update: 2024-09-16 04:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில் மது போதையில் ஹோட்டல் கடலில் தகராறு செய்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இளங்கோ தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 41. இவர் கரூர்- கோவை சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இதே ஓட்டலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், அருகே உள்ள வீரியம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் மற்றும் குளித்தலை, மேலமனதட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் வயது 29 இவர்கள் இருவரும் புரோட்டா மாஸ்டராக பணி புரிந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 3:45 மணி அளவில் இதே ஹோட்டலுக்கு மது போதையில் விக்னேஷ் மற்றும் ஜெகன் ஆகிய இருவரும் சாப்பிடுவதற்கு வந்தனர். இவர்கள் இருவரது நிலையைப் பார்த்து, இருவரையும் ஹோட்டலை விட்டு வெளியேற்றினர். இதனால் ஓட்டலில் பணியாற்றியவர்களை தகாத வார்த்தை பேசியதோடு ஹோட்டல் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரூ. 5000 மதிப்பிலான கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இதன் பின்னர் ஹோட்டல் முகப்பு பகுதியில் உள்ள கரூர் - கோவை சாலைக்கு வந்து, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர். இது தொடர்பாக ஹோட்டலில் வேலை பார்க்கும் ராஜ்குமார் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் மீது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பிறகு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஜெகனை கைது செய்து சிறையில் அடைத்தனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News