பாமக சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
இட ஒதுக்கீடு தியாகிகளுக்கான வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் பள்ளிபாளையம் நகர, ஒன்றியம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில்! செப்டம்பர் 17 இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் உமாசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் 21 இட ஒதுக்கீடு தியாகங்கள் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் தந்தை பெரியார் அவர்களின் 146 வது பிறந்த நாளை ஒட்டி அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.. இந்த நிகழ்வில் பழனியப்பன் மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன் ,மாநில செயற்குழு உறுப்பினர் கராத்தே என் சேகர், சின்னதுரை, மணி, செந்தில்நாதன், மெக்கானிக் ராஜா, ஒன்றிய செயலாளர் மூர்த்தி, ஒன்றிய தலைவர் ஜெயமுருகன் , மகாராஜா, அண்ணாமலை,காளிதாஸ், ராஜேந்திரன், கோவிந்தன், வழக்கறிஞர் மகாலிங்கம், செங்கோடு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் நகர செயலாளர் ராஜா என்கின்ற ராஜசேகர் நன்றி உரையாற்றினார்.