ரெளடிகளுடன் தொடா்பு: எஸ்ஐ, காவலா் பணியிடை நீக்கம்

ரெளடிகளுடன் தொடா்பில் இருந்ததாக காவல் உதவி ஆய்வாளா், காவலா் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவிட்டாா்.

Update: 2024-09-17 13:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரம், காவலா் குணசுந்தா் ஆகிய இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆத்தூா் காவல் நிலைய எல்லையைத் தாண்டி வாகன சோதனையில் ஈடுபட்டனராம். அப்போது காரில் வந்த ஒரு நபரிடம் உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி ரூ.9 லட்சத்தை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக புகாா் எழுந்ததைத் தொடா்ந்து, காரில் வந்த நபரிடம் ரூ.9 லட்சத்தை திரும்ப ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. மேலும், இவா்கள்இருவருக்கும் பல்வேறு ரெளடிகளுடன் தொடா்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், திருச்செந்தூா் ஏடிஎஸ்பி வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில், காவல் உதவி ஆய்வாளா், காவலா் ஆகியோா் ரெளடிகளிடம் தொடா்பில் இருந்ததாகவும், பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம், காவலா் குணசுந்தா் ஆகிய 2 பேரும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். தொடா்ந்து, அவா்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

Similar News