வன உயிரின வார விழா: போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசளித்த ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ வன உயிரின வார விழா – 2024 முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 63 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

Update: 2024-11-14 17:19 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் , மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , மேயர் து.கலாநிதி அவர்கள், மாவட்ட வன அலுவலர் சி.கலாநிதி, முன்னிலையில் வன உயிரின வார விழா – 2024 முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 63 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் வனத்தை சார்ந்துள்ள பல்லுயிர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அனைவருக்கும் அனைத்தும் எனும் திராவிட மாடல் ஆட்சியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகள், மரம் உள்ளிட்ட இயற்கை வளங்களை மேம்படுத்திடவும் பல்வேறு திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டத்தினை பசுமை மாவட்டமாக உருவாக்கிடவும், வன விலங்குகளின் பாதுகாப்பிற்கு உரிய இடமாக அமைந்திடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றிட உறுதியேற்று கொள்வோம். வன பரப்பை பாதுகாப்போம், வன விலங்கை பாதுகாப்போம், வன உயிரின வார விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற 63 மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்.மேலும், வன உயிரின வார விழா – 2024 ஐ சிறப்பாக கொண்டாடுவதற்கு சமூக பொறுப்பு நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிய பள்ளிபாளையம் சேஷாய் பேப்பர் மற்றும் போர்டு லிட் நிறுவனத்தினர், நாமக்கல் மாவட்டத்தில் அழிந்து வரும் குருவி இனங்களை பாதுகாத்து வரும் குமாரபாளையம் காவல் உதவி ஆய்வாளர் தவமணி, வன உயிரின வார விழா – 2024 முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளுக்கு நடுவர்களாக செயல்பட்ட 15 ஆசிரியர்கள், சுற்றுச்சூழலை மேம்படுத்திட உறுணையாக இருந்தமைக்கு அரசுத்துறை அலுவலர்களுக்கும் நினைவு பரிசுகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் எஸ்.கோகிலா, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News