நாமக்கல் போட்டித்தேர்வு நூலகத்தில் 57வது தேசிய நூலக வார விழா
அனைத்து மாணவா்களும் நூலகத்தை பயன்படுத்தி வாழ்க்கையில் உயா்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற நோக்கில் நூலக வாரவிழா கொண்டாடப்படுகிறது. நூலகத்தில் அனைத்து மாணவ, மாணவிகளும் உறுப்பினராக சேர வேண்டும். பாடநூல்களை படிப்பதோடு பொது அறிவு நூல்களை படிப்பதன் மூலம், எளிதாக போட்டி தோ்வில் வெற்றி பெற முடியும்’
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள போட்டித் தேர்வு நூலகத்தில் நூலக வார விழா நடைபெற்றது.விழாவில் மைய நூலக வாசகர் வட்ட தலைவர் பசுமை மா.தில்லை சிவக்குமார் தலைமையுரை ஆற்றி பேசுகையில் அனைத்து மாணவா்களும் நூலகத்தை பயன்படுத்தி வாழ்க்கையில் உயா்ந்த நிலைக்கு வரவேண்டும் என்ற நோக்கில் நூலக வாரவிழா கொண்டாடப்படுகிறது. நூலகத்தில் அனைத்து மாணவ, மாணவிகளும் உறுப்பினராக சேர வேண்டும். பாடநூல்களை படிப்பதோடு பொது அறிவு நூல்களை படிப்பதன் மூலம், எளிதாக போட்டித்தோ்வில் வெற்றி பெற முடியும் என்று பேசினார்.போட்டி தேர்வு நூலக வாசகர் வட்ட தலைவர் அமல்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்,நாமக்கல் மாவட்ட மைய நூலக நூலகர் சக்திவேல் வாழ்த்துரை வழங்கினார், ஓய்வு பெற்ற மின்சார வாரிய செயற்பொறியாளர் முருகானந்தம், வலையப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெகதீசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், விழா சிறப்புரை மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேசன் தலைவர் கணேசன் ஆற்றினார் இறுதியாக மாதேஸ்வரன் நன்றி உரை ஆற்றினார்.போட்டி தேர்விற்கு படித்து வருகிற மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.