பரமத்தி வேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு.

பரமத்தி வேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-09-17 13:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்தி வேலூர் வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கின் ‌விலை டன் ஒன்றுக்கு ரூ. 750 வரை‌ உயர்வடைந்து உள்ளதால் மரவள்ளி  பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப் பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.  கிழங்கு ஆலையில்     மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில்  உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம்  மரவள்ளிகிழங்கு டன் ஒன்று  ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.750 வரை உயர்வடைந்து  ரூ.8ஆயிரத்திற்கு750- க்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் டன் ஒன்று ரூ.12 ஆயிரத்திற்கு  விற்பனையானது. தற்போது விலை எதுவும் மாறாமல் கடந்த வாரம் விற்பனையான அதே விலையான  ரூ.12 ஆயிரத்திற்கே‌  விற்பனையாகிறது. மரவள்ளி கிழங்கு  விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

Similar News