குமாரபாளையத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

குமாரபாளையத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2024-09-18 17:44 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை வளாகம் புதிய கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் உமா ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார். பேருந்துகள் ஒரே வழியாக சென்று, ஒரே வழியாக வரும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. அதனை மாற்றி, பஸ் ஸ்டாண்ட் உள்ளே பேருந்துகள் வரும் போது ஒரு வழியிலும், வெளியில் செல்லும் போது மற்றொரு வழியிலும் செல்லும் வகையிலும் மாற்றியமைக்க மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சின்னப்பநாயக்கன்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஓலப்பாளையம் அமுதம் ரேசன் கடை, உள்ளிட்ட பல் இடங்களில் கலெக்டர் உமா ஆய்வினை மேற்கொண்டார். இதில் நகராட்சி கமிஷனர் குமரன், பொறியாளர் ராஜேந்திரன், உள்பட பலர் உடனிருந்தனர்.

Similar News