நமக்கு நாமே திட்டத்தில் உதவிட நகர மன்ற தலைவர் வேண்டுகோள்

நமக்கு நாமே திட்டத்தில் நகராட்சிக்கு உதவ வேண்டுமென நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்

Update: 2024-09-20 12:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அன்று   நமக்கு நாமே திட்டம் 2024-2025 இன் கீழ்  பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி மேம்பாட்டு பணிக்காக பிஎஸ்கே டெக்ஸ்டைல்ஸ், பொன்னுசாமி டெக்ஸ்டைல், தங்க லட்சுமி டெக்ஸ்டைல்ஸ், தண்டாயுதபாணி டெக்ஸ்டைல், செங்கோட்டையா டெக்ஸ்டைல் , வேலப்பன் டெக்ஸ்டைல் ,  19 பிராசசிங் மில், ஸ்ரீதேவி மில், கணேசன் டையிங், ஜெயமுருகன் டெக்ஸ்டைல்  , திருமுருகன் டெக்ஸ்டைல், நீலகிரி டெக்ஸ்டைல், சுரேகா டெக்ஸ்டைல்ஸ், பழனிமுத்து டெக்ஸ்டைல்  மற்றும் தொழில் நிறுவனங்கள் சார்பாக  ரூபாய் 10,00,000 பத்து லட்சம் ரூபாய் கான வரைவு ஓலையை பள்ளிபாளையம்  நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், முன்னிலையில், நகராட்சி ஆணையாளர் தாமரை அவர்களிடம் வழங்கினார்கள்.மேலும் இது குறித்து நகரமன்ற தலைவர்,துணை தலைவர் கூறும் பொழுது பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிலதிபர்கள் , தன்னார்வலர்கள் பொதுமக்கள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளிபாளையம் நகராட்சி வளம் பெற உதவிடுமாறு  வேண்டுகோள் விடுத்தனர்.இந்த நிகழ்வின்போது நகராட்சி பொறியாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News