பிரியாணி சாப்பிட்ட ஐந்து பேருக்கு வாந்தி மயக்கம் : உணவகத்தில் ஆய்வு
பிரியாணி சாப்பிட்ட ஐந்து பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் எழுந்த புகாரில் பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் உணவகத்தில் உணவின் தரம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு
பொன்னேரி எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்ட ஐந்து பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் எழுந்த புகாரில் பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் உணவகத்தில் உணவின் தரம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி எஸ் எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட ஐந்து பேருக்கு தொடர்ந்து காய்ச்சல் வாந்தி பேதி உடல் சோர்வு ஏற்பட்டதால் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர் ஏற்கனவே சென்னை கொடுங்கையூரில் செயல்படும் எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் இப்போதைக்கும் மேற்பட்டவர்கள் பிரியாணி சாப்பிட்டு பாதிப்பு ஏற்பட்டதால் கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் தற்போது பொன்னேரி எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட கும்மிடிப்பூண்டி ஆத்து பாக்கம் ரவிச்சந்திரன் வசந்த் சஞ்சய் எட்வின் ரெட்டம்பேடு பாஸ்கர் ஆகிய ஐந்து பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் நான்கு பேர் வீடு திரும்பினார் பாதிப்பு அதிகமாக இருந்த பாஸ்கர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு பிரியாணியின் தரம் குறித்து அங்கு சமைக்கப்படும் உணவு குறித்தும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர் மேலும் கடை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்த நிலையில் பொன்னேரி நகர் மன்ற தலைவர் பொன்னேரி எஸ் எஸ் ஹைதராபாத் உணவகத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உணவின் தரம் குறித்து பார்வையிட்டார் அலமாதி பகுதியில் இருந்து சமைக்கப்பட்டு பிரியாணி இங்கு விற்பனை செய்யப்படுவதால் அலமாதி பகுதியில் சமையல் செய்யும் பகுதியில் நேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது