திண்டுக்கல் - ஈரோடு இடையே இருவழி ரயில் பாதைக்கு ஆய்வு

திண்டுக்கல் - ஈரோடு இடையே இருவழி ரயில் பாதைக்கு ஆய்வு

Update: 2024-09-21 04:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல்-- -ஈரோடு இடையே இருவழி ரயில் பாதையாக மாற்றுவதற்கான ஆய்வு பணி நடக்கிறது.திண்டுக்கல்- கரூர் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே 74 கி.மீ., துாரத்திற்குள் எரியோடு, பாளையம், வெள்ளியனை என 3 ரயில்வே ஸ்டேஷன் உள்ளன. இந்த வழித்தடத்தில் முறையே 20, 24, 14,16 கி.மீ., என ரயில் நிலையங்களுக்கு இடையேயான இடைவெளி உள்ளது. இதனால் இத்தடத்தில் ஒரு ரயில் செல்லும் போது எதிர் திசையில் ரயில் வரும்போது 'கிராசிங்' செய்ய அதிக நேரம் ரயில்வே ஸ்டேஷன்களில் வழிவிட்டு செல்ல காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பயண நேரம்,தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் மதுரை -பெங்களூரு வந்தே பாரத் ரயில் திண்டுக்கல்லிலிருந்து நேரடியாக கரூர் செல்லாமல் திருச்சி வழியே இயக்கப்படும் நிலை உள்ளது. எதிர்காலத்தில் இவ்வழித்தடத்தின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் இருவழி பாதையாக மாற்ற ஆய்வு பணிக்கு ஒப்புதல் கிடைத்தது. இதனையடுத்து திண்டுக்கல்-- ஈரோடு இடையே இருவழி ரயில் பாதையாக மாற்ற ஆய்வு பணி நடக்கிறது.

Similar News