விருத்தாசலத்தில் எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவு குறுநாவல் போட்டி பரிசளிப்பு விழா

தமிழ் பல்லவி காலாண்டு இலக்கிய இதழ் சார்பில் நடந்தது

Update: 2024-09-22 13:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலத்தில் தமிழ் பல்லவி காலாண்டு இலக்கிய இதழ் சார்பில் எழுத்தாளர் வே. சபாநாயகம் நினைவு குறுநாவல் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக அரசின் பரிசுப் பெற்ற எழுத்தாளர்கள் பாவலர் மலரடியான், நெய்வேலி பாரதிக் குமார் ஆகியோர் பாராட்டப்பட்டனர். குறுநாவல் போட்டியில் வெற்றிப் பெற்ற ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன. கவிஞர் கரிகாலன் தலைமைத் தாங்கினார். வழக்கறிஞர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் ரமேஷ் சந்த் நூல்களை வெளியிட்டார். மங்கள நாயகி, இராஜேஸ்வரி, விழுப்புரம் வீரமணி ஆகியோர் நூலினைப் பெற்றுக் கொண்டனர். மகாகவி கவிஞர் பழமலய் தலைமையில் நடைபெற்ற வாழ்த்து அரங்கில் சந்திர சேகர், தினகரன், குமார், ராஜசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். எழுத்தாளர்கள் பாவலர் மலரடியான், நெய்வேலி பாரதிக்ககுமார் ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள். சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் சிறப்புரை ஆற்றினார். தமிழ்ப் பல்லவி காலாண்டு இலக்கிய இதழின் ஆசிரியர் பல்லவி குமார் நன்றி கூறினார்.

Similar News