ரேக்ளா போட்டியில் சீறி பாய்ந்த குதிரைகள்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி குமாரபாளையத்தில் ரேக்ளா போட்டி நடந்தது.

Update: 2024-09-22 14:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், சார்பில் 10ம் ஆண்டு ரேக்ளா போட்டி நடந்தது. நாமக்கல் மாவட்ட குதிரை ரேக்ளா சங்க தலைவர் சிங்காரவேல் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணிதரன், நகர அ.தி.மு.க. செயலர் பாலசுப்ரமணி பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரொக்கப்பரிசு, கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் பரிசாக வழங்கினர். இதில் உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 43 இன்ச் குதிரை, 45 இன்ச் குதிரை, பெரிய குதிரை உள்பட பல்வேறு பிரிவுகளில் 7 போட்டிகள் நடந்தன. 45 இன்ச் குதிரை போட்டியில் குளித்தலை ஜாக்கி ஆறுமுகம் முதல் பரிசும், திருச்சி உறையூர் விஜயா இரண்டாம் பரிசும், பவானி வெங்கிடு மூன்றாம் பரிசும், சாகுல் நான்காம் பரிசும் பெற்றனர். பெரிய குதிரைகள் போட்டியில் கோவை கணேசன் முதல் பரிசும், அன்னூர் மூர்த்தி இரண்டாம் பரிசும், ஈரோடு ஜல்லை வம்சம் மூன்றாம் பரிசும், சேலம் சந்திரன் நான்காம் பரிசும் பெற்றனர். உள்ளூர் குதிரை போட்டியில் ஸ்ரீதர் முதல் பரிசும், மஞ்சு பிரதர்ஸ் இரண்டாம் பரிசும், பவானி கருப்புராயண் துணை மூன்றாம் பரிசும், கற்பக விநாயகர் சிங்காரவேல் நான்காம் பரிசும் பெற்றனர். புதிய குதிரைகள் போட்டியில் குளித்தலை தண்டபாணி முதல் பரிசும், தையல் பாய்ஸ் வெற்றிவேல் இரண்டாம் பரிசும், தண்டையார் பேட்டை அருண் மூன்றாம் பரிசும், திருச்சி நம்பி உதயசூரியன் நான்காம் பரிசும் பெற்றனர். புதிய குதிரை போட்டியில் டைகர் நினைவு வாணியம்பாடி பைபாஸ் குதிரை முதல் பரிசும், கற்பக விநாயகர் சிங்காரவேல் இரண்டாம் பரிசும், உறையூர் விஜயா மூன்றாம் பரிசும் பெற்றனர். 43 இன்ச் குதிரை போட்டியில் திருநாகேஸ்வரம் பாஸ்கர் முதல் பரிசும், அம்மாபேட்டை கொம்பன் பாய்ஸ் இரண்டாம் பரிசும், புதுக்கோட்டை ஆறுமுகம் மூன்றாம் பரிசும், திருப்பத்தூர் எம்.கே. குரூப்ஸ் நான்காம் பரிசும் பெற்றனர். 44 இன்ச் குதிரை போட்டியில் கற்பக விநாயகர் சிங்காரவேல் முதல் பரிசும், குளித்தலை நிமலன் இரண்டாம் பரிசும், யானம் கார்த்தி மூன்றாம் பரிசும், சாதிக்பாய் நான்காம் பரிசும் பெற்றனர். குதிரைகளுக்கு தகுந்தாற்போல் போட்டியின் தூரம் 7,8,9,10 மைல்கள் எனும் வகையில் தூரம் வைக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியை காண பொதுமக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்துக்கள் ஏற்பட்டால் பாதிககப்பட்ட நபர்களை அழைத்து செல்கள வண்டிகளுக்கு முன்பாக நேஷனல் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குதிரை வண்டிகளுக்கு பின்னால் டூவீலர்கள் போக கூடாது, ஜாக்கிகளுக்கு பிற நபர்கள் உதவி செய்யக்கூடாது, என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. தே.மு.தி.க. நகர செயலர் நாராயணசாமி, முன்னாள் கவுன்சிலர் சேகர் உள்பட பலரும் பங்கேற்றனர்.

Similar News