தி.வி.க. பொதுக்கூட்டம் கொளத்தூர் மணி பங்கேற்பு
குமாரபாளையத்தில் நடந்த திராவிட விடுதலை கழக பொதுக்கூட்டத்தில் கொளத்தூர் மணி பங்கேற்று பேசினார்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திராவிட விடுதலை கழகம் சார்பில் பெரியார் 146ம் ஆண்டு விழா மற்றும் குடியரசு 100 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பொதுக்கூட்டத்தில் கொளத்தூர் மணி பங்கேற்று பேசினார். குடியரசு 100 சுயமரியாதை இயக்க பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பேசியதாவது குடியரசு நாளிதழ் 02.05 1925 ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்டு 2024 ஆண்டுடன் நூறாண்டுகள் கடந்து, 100 சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம் நடந்தப்படுகிறது. ஜாதி என்றால் ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக, பாலினம் என்றால் ஆணாதிக்கத்திற்கு எதிராக, பொருளாதாரம் என்றால் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக, மொழி என்றால் மொழி திணிப்புக்கு எதிராக, தமிழின் சுயமரியாதைக்காக இப்படி ஒவ்வொன்றிலும் சுயமரியாதையைத்தான் அவர் மீட்டுக் கொடுப்பதற்கு தன் வாழ்நாள் முழுதும் செலவழித்து இருக்கிறார் விஞ்ஞானிகள் மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை ஏற்று உரையாற்றுகிற போது, அந்த காலத்திலேயே உறுப்பு மாற்றி சிகிச்சை செய்தவர்கள் யானையின் தலையை எடுத்து மனித உடலில் வைத்து விநாயகர் உருவானது என்பது அந்த காலத்தில் அப்பவே மருத்துவத்தில் நாங்கள் உறுப்பு மாற்று சிகிச்சையை தெரிந்து கொண்டவர்கள், காந்தாரி ரத்தக்கட்டியில் தான் காந்தாரி குழந்தை பிறந்தது. குந்தவிக்குதான் குழந்தையும் பொறந்தாங்க. ரத்தக்கட்டியோடு வந்து ஸ்டெம் செல் முறையில் அதன் நூறா வெட்டி அதை போட்டு அதை குழந்தைகளாக மாற்றி 100 கௌரவர்களை பிறப்பித்தவர்கள். எங்கள் இந்து மதத்துல அவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் இருந்தாங்க என்று சொன்னார். அதற்கு அந்த மாநாட்டில் ஒரு பையன் பேசாம அமைதியாக இருந்தான். ஒருத்தனும் ஒன்னும் சொல்லவில்லை நான் ஒரு சுதந்திர மனிதன் எனக்கு சுதந்திர நினைப்பு சுதந்திர அனுபவம் சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை அப்படியே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். என்னுடைய சுதந்திர சிந்தனை சுதந்திர உணர்ச்சி சுதந்திர அனுபவத்தை அதற்கான தீர்வு வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்கள் சுதந்திர சிந்தனை, உங்கள் சுதந்திர உணர்ச்சி, அதை வைத்துக்கொண்டு சுதந்திர அனுபவம், இதை வைத்துக்கொண்டு பரிசீலனை செய்து ஒப்புக்கொள்ள கூடியவைகளை ஒப்புக்கொள்ளுங்கள் தள்ளக்கூடியவர்களை தள்ளிவிடுங்கள், என்று நிபந்தனையின் பேரில் தான் எதையும் தெரிவிக்கிறேன். தன் மீதுள்ள தீண்டாமை போகாதா என்று ஆதங்கப்பட்டு இருக்கும் என் தாழ்த்தப்பட்ட தோழனுக்கு சொன்ன அறிவுரை. ஒரு செகண்டில் இஸ்லாமியராக மாறிவிடு, உன் மேல் உள்ள தீண்டாமை அப்பொழுதே போய்விடும் என்று சொன்னார். வைக்கம் கோயிலில் நடந்தது கோயிலில் நுழையக்கூடாது என்ற போராட்டம் அல்ல, கோயிலை சுற்றி இருக்கிற வீதியில் என் மக்கள் நடக்க கூடாது என்றால் காரணம் ஒவ்வொருத்தருக்கும் அந்த 18 ஜாதி கடவுள் இருந்த இடத்தில் இருந்து 64 முழத்துக்குள்ள போனால் கடவுளுக்கு தீட்டு ஆயிடும். அந்த ஒரு சாலை வந்து 64 முழத்துக்கு கம்மியா இருந்துச்சு. இதுல போனா எங்க சாமி செத்து போயிரும்டா, அதன் அர்த்தம் தீட்டாக இருந்தா சக்தி போயிடும்கிறான். பாரதிதாசன் அழகாக கேட்டார், எங்க அம்மாசி தொட்டா ஆண்டவன் செத்து போயிருவன்னா, யாருக்கு சக்தி அதிகம்? எங்க அம்மாசிக்கா? உங்க ஆண்டவனுக்கா? என்று கேட்டார் இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட காப்பாளர் அண்ணாதுரை, நகர தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலர் சரவணன், திராவிடமணி, முத்துபாண்டி, குமார், தி.க. நகர தலைவர் சரவணன், சந்திரா, ரேணுகா, மோகன், சேகுவேரா, மாதேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர். மந்திரமல்ல, தந்திரமே என்ற நிகழ்ச்சியை ராசன்,ரத்தினசாமி நடத்தினர்.