பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் ஜீரோ பாயிண்ட் வழியாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் ஜீரோ பாயிண்ட் வழியாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது வினாடிக்கு 50 கனஅடியாக வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் தற்போதுவினாடிக்கு 100 கன அடி ஆக அதிகரிப்பு மேலும் நீர் வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாயிண்ட்டிற்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து 500 கன அடியாக திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் 1300 கன அடியாக படிப்படியாக கூடுதலாக திறக்கப்பட்டு தமிழக எல்லையை.நேற்று வந்தடைந்தது அதனை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்ற நிலையில் வழி நெடுகிலும் கிருஷ்ணா நதி நீர் கால்வாய் ஆங்காங்கே சேதம் ஆகி உள்ளதால் நீர் வரத்தின் வேகம் குறைந்து உள்ளது ஜீரோ பாயிண்ட்டிற்கு 195 கன அடி மட்டுமே வினாடிக்கு தற்போது கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டிருக்கிறது ஜீரோ பாயிண்ட் லிருந்து பூண்டி நீர் தேக்கம் வரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் இருபுறமும் சேதம் ஆகியுள்ளதால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதி நீர் செல்லும் வேகம் குறைந்துள்ளது முறையாக கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.