கடமையை செய்ய விடுங்கள் கை கூப்பி கேட்ட அரசு அதிகாரி : பரபரப்பு
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தயவு செய்து என் கடமையை செய்ய விடுங்கள் இரண்டு கைகளையும் கும்பிட்டு கேட்ட அரசு அதிகாரியால் பரபரப்பு
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தயவுசெய்து என் கடமையை செய்ய விடுங்கள் இரண்டு கைகளையும் கும்பிட்டு கேட்ட அரசு அதிகாரியால் பரபரப்பு திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் கடந்த 2020 ஆம் ஆண்டு எம் டி சி பிசினஸ் மற்றும் ஓ பி ஜி எனப்படும் இரு வேறு தனியார் தொழிற்சாலைகள் ஓடை, மயானம், வாய்க்கால் வகைப்பாடு கொண்ட அரசு நிலங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வருவதாகவும் அந்த நிலங்களை அகற்றுமாறும் கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின்படி, வழக்கில் குறிப்பிடப்பட்ட 9 சர்வே எண்களில் உள்ள அரசு நலங்களையும் மீட்டு அதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் படி நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உட்பட 12 நபர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணை நகல் அனுப்பப்பட்டது. உயர்நீதிமன்ற ஆணையின்படி நிலங்களை மீட்க வந்த அரசு அதிகாரிகளுக்கும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் அங்கு வசித்து வந்த ஏழை விவசாயிகளின் வீடுகள் மட்டும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்தப் புகைப்படங்களை வைத்து உயர் நீதிமன்றமும் ஏமாற்றப்பட்டது. இதை கையில் எடுத்த சமூக ஆர்வலர் கார்த்திக் என்பவர் நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் நிலைநாட்ட தவறியதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில் இன்று நிகழ்விடத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டபோது ஊராட்சி மன்ற நிர்வாகிகள் உட்பட தொழிற்சாலையின் ஆதரவாளர்கள் சிலர் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் தடுத்தனர். அவர்களிடம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவசண்முகம் அரசுப் பணியை செய்ய விடுமாறு தனது இருகைகளை கூப்பி கும்பிட்டார். பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணகுமாரி ஆக்கிரமிப்புகள் அகத்தும் பணி குறித்து ஆய்வு செய்தார் மேலும் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்குமாறு தொழிற்சாலை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது மேலும் அங்கு வேலை பார்க்கும் நானூருக்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தொழிற்சாலை நிர்வாகத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது