உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம பல்கலை பேராசிரியர்கள்
உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம பல்கலை பேராசிரியர்கள்
அமெரிக்க பல்கலை பேராசிரியர் குழு வெளியிட்டுள்ள உலகின் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதல் 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் காந்திகிராம பல்கலையின் நான்கு பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலை பேராசிரியர் ஜான்லொன்னிடிஸ் தலைமையிலான குழுவினர் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர்களை கொண்டு பட்டியல் தயாரித்தனர். குறைந்தபட்சம் ஐந்து ஆய்வு கட்டுரைகள், புலம், துணை புலம் சார்ந்த சதவீதங்களின் அடிப்படையில் தரவரிசை ஏற்படுத்தப்பட்டது. பட்டியல் வெளியான நிலையில் இதில் உலகம் முழுதும் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவில், 3,500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களோடு திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம நிகர் நிலை பல்கலை விஞ்ஞானிகள் பாலசுப்பிரமணியம், மீனாட்சி, மாரிமுத்து, ஆபிரகாம்ஜான் இடம் பெற்றுள்ளனர். விஞ்ஞானி ஆபிரகாம்ஜான் தவிர்த்து மற்ற மூவரும் 2019, 2020, 2021, 2022ல் வெளியான உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தேர்வாகி உள்ளனர்.