அரசு நூலகத்தில் சிறுகதை திருவிழா
குமாரபாளையம் அரசு நூலகத்தில் சிறுகதை திருவிழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் பிரகாஷ் தலைமையில் வாசிப்பை நேசிப்போம் மற்றும் சிறுகதைகள் திருவிழா நடந்தது. அரசு பள்ளி மாணவர்கள் தமிழ், சுரேஷ், விஷ்ணு தர்ஷன்,கபீஸ், உள்பட பெருமளவில் பங்கேற்று சிறுகதைகள் சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள். இதில் சிறுகதைகள் சொன்ன மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. நூல்கள் வாசிப்பதன் அவசியம் குறித்து கூட்டத்தில் எழுத்தாளர்கள் கேசவ மூர்த்தி, ராஜகோபாலன், கவிஞர் குமரேசன், மற்றும் ஆசிரியை பங்கஜம், முனைவர் சண்முகம், டாக்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பேசினார்கள். மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வாசகர் வட்டம் ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும், அதிக மாணவ, மாணவியர்களை பங்கேற்க வைப்பது எனவும், வாசகர் வட்டத்தில் அதிக உறுப்பினர்கள் சேர்த்தல் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஆசிரியர்கள் சத்தியமூர்த்தி, பன்னீர், தீனா, ஜெகதீஸ்வரி, பன்னீர்செல்வம், ரூத், ஜமுனாராணி, மற்றும் பலர் பங்கேற்றனர்.