கரூரில், சர்வதேச போதை பொருளுக்கு எதிரான நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கரூரில், சர்வதேச போதை பொருளுக்கு எதிரான நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-09-25 06:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில், சர்வதேச போதை பொருளுக்கு எதிரான நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கரூர் நகரப் பகுதியில் செயல்படும் சிஎஸ்ஐ பிஷப் சாலமன் துரைசாமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து நடத்திய, போதை பொருளுக்கு எதிரான உலக சாதனை நிகழ்வு மற்றும் போதை பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கரூர் காவல் உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் கல்லூரி வளாகத்தில் துவக்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் உமேஷ் சாமுவேல் ஜெபசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில், கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, போதை ஒழிப்புக்கு எதிரான கருத்துகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு ஜவஹர் பஜார், கரூர் பேருந்து நிலையம், திண்ணப்பகார்னர் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்து அடைந்தது.

Similar News