விருத்தாசலத்தில் மக்களுடன் முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அமைச்சர் சி.வெ. கணேசன் பங்கேற்பு

Update: 2024-09-25 17:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விருத்தாசலம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் மெக்மூத் தலைமை தாங்கினார். விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், விருத்தாசலம் நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், துணைத் தலைவர் ராணி தண்டபாணி, ஒன்றிய பெருந்தலைவர் மலர் முருகன், ஒன்றிய துணை பெருந்தலைவர் பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் உதயகுமார் அனைவரையும் வரவேற்றார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக அரசு அதிகாரிகளை சந்திக்க அலைந்து திரிந்து வந்த நிலையில் அதிகாரிகளே மக்களிடம் சென்று மனுக்களை பெற்று அதனை நிறைவேற்றித் தரும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் மக்களுடன் முதல்வர் திட்டம். மக்களுக்காக எந்நேரமும் உழைத்துக் கொண்டிருப்பவர் நமது முதல்வர் அவர்கள். பெண்களுக்கான பல திட்டங்களை உருவாக்கி தந்துள்ளார். ஆண்களுக்கு நிகராக பெண்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர் அதற்காக தமிழக முதல்வர் உந்து சக்தியாக உள்ளார். இதன் காரணமாக பெண் குடும்ப பராமரிப்பு உரிமை தொகை திட்டம், கல்லூரி பெண்களுக்கு மாதம் ஆயிரம், குடும்பப் பெண்கள் சுமை குறைக்க பள்ளியில் காலை உணவு திட்டம், மகளிர்க்கான பேருந்து கட்டணம் இலவசம், கர்ப்பிணி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் போன்ற பல்வேறு திட்டங்கள் பெண்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள் ஆகும். மேலும் முதியோர் உதவித்தொகை பெற வருபவர்களை அலைக்கழிக்காமல் உடனடியாக அவர்களுக்கு செய்து தர வேண்டும். இந்தியாவிலேயே மருத்துவத்தில் தமிழகம் தான் முதலிடம். இவ்வாறு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி முதல்வர் ஆட்சி செய்து வருகிறார். அதன் வகையில் முதல்வர் மு க ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் இந்த மக்களுடன் முதல்வர் திட்டம் எனக் கூறினார். இதில் 208 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, 36 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, 34 பேருக்கு பட்டா மாற்றம் மற்றும் முழு புலம் வழங்குதல், 17 பேருக்கு பட்டா மாற்றம் உட்பிரிவு செய்தல், 15 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உதவித்தொகை என 300 பயனாளிகளுக்கு 18 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார் நன்றி கூறினார். இதில் நகரச் செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, சுரேஷ், நகர மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் ராமு, நகர துணை செயலாளர் நம்பிராஜன், மாவட்ட பிரதிநிதி ஆட்டோ பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் தர்ம மணிவேல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி விருத்தாசலம் நகரத் தலைவர் ரஞ்சித்குமார், மங்கலம்பேட்டை நகர தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். துணை தாசில்தார்கள் செல்வமணி, கோவிந்தன், வட்ட வழங்கல் அலுவலர் அனுசியா, மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய் துறையில் பலர் கலந்து கொண்டனர்.

Similar News