அரசு கல்லூரியில் போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு கருத்தரங்கம்

அரசு கல்லூரியில் போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு கருத்தரங்கம்

Update: 2024-09-26 02:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வர் முனைவர் விஜயா தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் முனைவர் சேதுராமன் வரவேற்றார். விழாவில், ஆலங்குடி போலீஸ் டிஎஸ்பி கலையரசன் கலந்து கொண்டு போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் செயல்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில், ராணியம்மாள் அறக்கட்டளை நிறுவனர் சர்வம் சரவணன், கல்லூரி கௌரவ விரிவுரையாளர் முனைவர் புஷ்பலதா உட்பட கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கார்த்திகேயனி விஜயகுமாரி நன்றி கூறினார்.

Similar News