போலிச் சான்று வழங்கிய முன்னாள் எஸ்எஸ்ஐ உள்பட இரண்டு பேர் கைது!
குற்றச் செய்திகள்
நிலப்பத்திரம் காணாமல்போன புகாரில், அதை கண்டறிய முடியவில்லை என்ற காவல் துறையின் சான்றினை போலியாகத் தயாரித்து கொடுத்ததாக ஓய்வுபெற்ற சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் (ஓய்வு எஸ்எஸ்ஐ) உள்பட இருவரை திருக்கோகர்ணம் போலீஸார் கைது செய்தனர். புதுக்கோட்டை நகரிலுள்ள ஓர் இடத்துக்கான பத்திரம் காணாமல்போனதாக கடந்த சில மாதங்களுக்கு அளிக்கப்பட்ட புகாரின்பேரில், முகமது காசிம் மற்றும் மூக்கையா ஆகியோரை போலீஸார் நேரில் அழைத்து விசாரணை நடத்திஅப்போது, ஏற்கெனவே காவல் நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்ட ‘ஆவணம் கண்டுபிடிக்க முடியவில்லை' என்ற சான்றிதழ் போலியானது எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அப்போது சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கீழ 5- ஆம் வீதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (60) மற்றும் மேலமுத்துடையான்பட்டியைச் சேர்ந்த மூக்கையா (49) ஆகிய இருவரையும் திருக்கோகர்ணம் போலீஸார் கைது செய்தனர். காவல் உதவி ஆய்வாளர் பெயரில் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட இந்தப் போலிச் சான்றிதழுக்காக எஸ்எஸ்ஐ பாலசுப்பிரமணியன்பணம் வாங்கிக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதுகைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.