விருத்தாசலம் அருகே மான் வேட்டையாடிய ஒருவர் கைது
மூன்று துப்பாக்கிகள் பறிமுதல்
விருத்தாசலம் அடுத்த வேப்பூர் சிறுபாக்கம் பகுதியில் மானை வேட்டையாடி காரில் மான்கறி விற்பனை செய்வதாக விருத்தாசலம் வனத்துறை அலுவலகத்திற்கு புகார் சென்றது. அதன் பேரில் விருத்தாச்சலம் வனத்துறை அலுவலர் ரகுவரன் தலைமையிலான வனத்துறையினர் சிறுப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு காரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் சிறுப்பாக்கம் பொன்னுசாமி மகன் சாமுவேல் (வயது 32) என்பதும் அவருடைய காரை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பொட்டியம் கிராமத்தை சேர்ந்தவரும் லக்கூரில் வசித்து வரும் பழனிவேல் மகன் ரவி என்பவரும் சிறுபாக்கம் புதிய காலனியைச் சேர்ந்த அஜித் என்பவரும் மானை வேட்டையாடி காரில் எடுத்துச் சென்று விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்தது. அதன் பேரில் சாமுவேலை பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்து ரவி வீட்டில் சோதனையிட்டபோது லக்க்கூரில் உள்ள அவரது வீட்டு வாழை தோட்டத்தில் 3 நாட்டு துப்பாக்கிகள், லைட், வன விலங்குகளை வசீகரிக்க செய்யும் ஒலி எழுப்பும் 3 கருவிகள் மற்றும் மானை வெட்ட பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் ரவி, அஜித் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்