திருப்பூரில் உயிரிழந்த ஆடுகளை பாடைகட்டி எடுத்து வந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தியதால் ஆட்டை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!
திருப்பூரில் உயிரிழந்த ஆடுகளை பாடைகட்டி எடுத்து வந்த விவசாயிகளை தடுத்து நிறுத்தியதால் ஆட்டை சாலையில் வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் உயிரிழந்த ஆடுகளை பாடை கட்டி எடுத்து வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆட்டை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள்! திருப்பூர் மாவட்டம் காங்கயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் ஏராளமான ஆடுகள் வெறிநாய்கள் கடித்ததில் உயிரிழந்தது இந்நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உயிரிழந்த ஒரு ஆட்டிற்கு கூட நிவாரணம் வழங்கவில்லை என்றும், பலமுறை உயிரிழந்த ஆடுகளை வைத்து போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்காமலும் அதே போல் வெறி நாய்களை கட்டுப்படுத்தாமலும் அலட்சிய போக்குடன் செயல்பட்டு வரும் மாவட்ட நிர்வாகத்தின் செயலை கண்டிக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் உயிரிழந்த ஆடுகளை மாவட்ட ஆட்சியரிடம் காண்பிப்பதற்காக காங்கேயம் சுற்றுவட்டார பகுதியில் உயிரிழந்த 20க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் இன்று எடுத்து வந்தனர். இதனிடையே போலீசார் நல்லூர் பகுதியில் விவசாயிகளை தடுத்து நிறுத்தினார் இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தாங்கள் எடுத்து வந்த ஆடுகளை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் உயிரிழந்த ஆடுகளுடன் தாங்கள் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை சந்தித்து முறையிட வேண்டும் அல்லது மாவட்ட ஆட்சியர் இங்கு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.