சினிமா பாணியில் கண்டனரில் பயன்படுத்திய கும்பல் கைது ஒருவர் என்கவுண்டர்
குமாரபாளையம் அருகே சினிமா பாணியில் பணம் கடத்திய கண்டைனர் லாரியை வந்த கொள்ளை க்கும்பலை சுற்றி வளைத்து பிடித்த நாமக்கல் மாவட்ட போலீசார் ஒருவர் என்கவுண்டரில் கொலை
இன்று காலை கேரள காவல்துறையிலிருந்து திருச்சூரிலிருந்து பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் ஒன்றிலிருந்து திருடப்பட்ட 65 லட்சத்திற்கும் மேலான 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் ஹூண்டாய் கிரிட்டா காருடன் கண்டெய்னரில் வருவதாக தமிழக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து அது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எல்லையை நோக்கி வருவதாக தமிழக காவல்துறை கொடுத்த அலர்டை அடுத்து நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின் படி லாரியை சேஸ் செய்ய தயாரான போலீசார்... கண்டெய்னர் லாரி குமாரபாளையம் நோக்கி வந்தவுடன் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் ஹைவே பேட்ரோல் என போலீசார் கண்டெய்னரை நிறுத்த முற்பட்டபோது அங்கிருந்தே நிற்காமல் வந்து கொண்டிருந்த கண்டைனர் சங்ககிரி வரை வந்ததை அடுத்து அந்த கண்டெய்னர் லாரி சங்ககிரியில் திரும்பும் போது பல்வேறு வாகனங்களை இடித்து தள்ளி வந்துள்ளது லாரியை பின் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் ஜுப்பிலும் பைக்கிலும் பின் தொடர்ந்து வந்தனர் அம்மன் கோவில் பகுதியில் லாரி வரும் பொழுது பல பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அங்குள்ள பலரை இருசக்கர வாகனம் காரண இடித்து தள்ளி வந்துள்ளது வெப்படை நோக்கி வந்த லாரி அங்கு இருந்த ஒரு பெட்ரோல் பங்கில் யுடர்ன் அடித்து அங்கே பெட்ரோல் பங்கில் இருந்த ஒரு வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரை 200 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று அந்த வாகனத்தின் ஓட்டுநர் தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட நபர் ஜமாய்தின் இரக்கமற்ற முறையில் வாகனத்தை ஒட்டியுள்ளார்.... இதனைக் கண்ட பொதுமக்கள் வெப்படியிலிருந்து திரும்பி சேச்சிங்கில் சென்ற லாரியை கல்லால் அடித்து அந்த வாகனத்தின் கண்ணாடி ஓட்டுநரை தாக்கியுள்ளனர் சன்னியாசி பட்டி என்ற பகுதியில் பொதுமக்கள் உதவியுடன் கன்டெய்னர் லாரியை மடக்கிப் பிடித்த போலீசார்... கண்டெய்னரை திறந்து பார்த்தபோது உள்ளே 5 நபர்களும் ஒரு ஹூண்டாய் க்ரெட்டா காரும் இருப்பதை பார்த்து முன்னால் இருந்த நபர்களை பின்னால் ஏற்றி கண்டெய்னரை அடைத்து விட்டு கண்டெய்னர் லாரியை காவல்துறை எடுத்து வரும் வழியில் உள்ளே இருந்த ஏழு நபர்களும் கத்தி கூச்சலிட்டு கண்டெய்னரை உடைத்து சத்தமிடவே செட்டியார் கடை பகுதியில் லாரியை நிறுத்தி கண்டைனர் திறந்த போலீசார்.... அதிலிருந்து ஜமாய்தீன் மற்றும் இன்னொரு நபர் தப்பி ஓட முயற்சிக்கவே அப்போது குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் மல்லசமுத்திரம் துனை காவல் ஆய்வாளர் ரஞ்சித் ஆகிய இருவரையும் கடுமையான ஆயுதங்களால் தாக்கிவிட்டு ஜமாய்தீன் மற்றும் இன்னொரு நபர் என இருவரும் கண்டெய்னரில் இருந்த பண பையை எடுத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் தப்பிக்க முயற்சித்துள்ளனர் அப்போது அவர்களை பின்தொடர்ந்து ஓடிய போலீசாரை மேலும் அவர்கள் தாக்கவே தற்காப்பிற்காக குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மேலே ஒரு குண்டு சுட்டு ஜமாய்தினை எச்சரித்த போதும் அவர் கையில் இருந்த ஆயுதத்தால் காவல் ஆய்வாளர் தவமணியின் நெஞ்சு பகுதியை கிழிக்கவே அவர் ஜமாதின் முதுகில் சுட்டுள்ளார் அவரைத் தொடர்ந்து இன்னொரு நபரையும் காலில் சுட்டு காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் என்கவுண்டரில் ஈடுபட்டிருக்கின்றனர்.... இதனைத் தொடர்ந்து கண்டெய்னரில் இருந்த மீதி 5 நபர்களும் கைது செய்யப்பட்டு எப்படி காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்... என்கவுண்டர் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த சேலம் சரக ஐஜி உமா சம்பவ இடத்தை பார்வையிட்டார் மேலும் காயம் பட்ட காவலர்கள் இருவரும் ஒருவர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை மற்றும் இன்னொருவர் நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.... இதனால் வெப்படை முதல் சங்ககிரி வரை செல்லக்கூடிய பிரதான சாலையில் ஈரோடு சேலம் செல்லக்கூடிய பேருந்துகள் மற்றும் பல்வேறு அனைத்து வாகனங்களும் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை அடைக்கப்பட்டு போக்குவரத்து மிகவும் பதட்டமான சூழல் ஏற்பட்டது என்கவுண்டரில் இறந்த ஜமாதின் உடல் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.... கைது செய்யப்பட்ட நபர்கள் கொண்டு வந்த வாகனங்கள் மற்றும் பொருள்களை சேலம் தடையவியல் நிபுணர்களை வைத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது... அந்த ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு இரண்டு நம்பர் பிளேட்டுகள் இருந்தன அவர்கள் கொண்டு வந்திருந்த அனைத்தையும் சோதனை இட்டனர் சம்பந்தப்பட்ட நபர்கள் பிரபல ஏடிஎம் கொள்ளையர்கள் என தெரியவந்தது ஏழு பேருமே ஹரியானா பகுதியைச் சேர்ந்த நபர்கள் என்றும் தெரிய வந்தது கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட எஸ் கே லாஜிஸ்டிக் எனப்படும் கண்டெய்னர் லாரி உரிமையாளரின் பெயர் சலீம் கான் என தெரியவந்துள்ளது முதலில் கொள்ளைக்கு காரை பயன்படுத்தி அந்த காரில் வந்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என அந்தக் காரை கண்டெய்னரில் ஏற்றி கொள்ளையர்கள் திட்டம் போட்டு பணத்தை திருடி உளளது தெரியவந்தது.... மேலும் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஏற்கனவே கிருஷ்ணகிரியில் ஏடிஎம் ஒன்றில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதால் கிருஷ்ணகிரி எஸ் பி தங்கதுரை வெப்படை காவல் நிலையம் வந்து கொள்ளையர்களிடம் விசாரணை மேற்கொண்டார் மேலும் திருச்சூரில் இருந்து வந்த கேரள காவல்துறையினர் தமிழக காவல்துறையின் செயலை பாராட்டியுள்ளதோடு... அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாலும் ஆறு நபர்களையும் தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர்.... அதோடு மட்டுமில்லாமல் கடப்பாவில் இருந்து ஆந்திர போலீசார் வருகை தர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன... என்கவுண்டர் நடைபெற்ற இடத்தை குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி நேரடியாக சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.... இந்திய அளவில் பல்வேறு ஏடிஎம் களில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பித்து வந்த பிரபல கொள்ளையர்கள் தற்போது தமிழக போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினராலும் வரவேற்பை பெற்றுள்ளது.... ஆறு நபர்களும் தற்போது வரை வெப்படை காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டு உள்ளனர்...