கொள்ளையர்கள் வந்த கண்டனர் லாரியின் சிசிடிவி கட்சிகள் போலீசார் வெளியிட்டனர்
வெப்படையில் பிடிபட்டகொள்ளையர்கள் வந்த கண்டனர் லாரியின் சிசிடிவி கட்சிகள் போலீசார் வெளியிட்டனர்
கேரள மாநிலம் திரிச்சூரில் நேற்று அதிகாலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திய நிலையில் தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் வழியாக கொள்ளையடிக்க பயன்படுத்திய காரை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு தப்பி செல்ல முயன்றனர்.அப்போது நாமக்கல் மாவட்ட போலீஸார் வெப்ப டையில் கண்டெய்னர் லாரியுடன் கொள்ளை கும்பலை போலீசார் பிடிக்க முயன்ற போது வெப்ப டையில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் வாகனத்தில் சென்ற ஒரு கார் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு போலீசார் தப்பியோட முயன்ற ஒருவரை என்கவுண்டர் செய்தும் ஒருவரை முழங்காலில் சுட்டும் மீதம் கண்டெய்னர் லாரியில் இருந்த 5பேரையும் போலீசார் கைது செய்து வெப்படை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் நல்லசாமி மற்றும் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் சிவ பிரகாசம் ஆகியோர் கொடுத்த புகாரின்பேரில் வெப்படை போலீசார் அரசு சொத்தினை சேதப்படுத்தியது,பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டியது,அரசு ஊழியரை ஆயுதத்தால் தாக்கியது என 7பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறை தரப்பில் கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்ய மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் சாலையில் செல்லும் வாகனத்தை கண்டெய்னர் லாரி மோதியது என வடமாநில கொள்ளை சாலையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டிய சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.இதற்கு முன்னதாக வெப்படை காவல்நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கன்னா 5பேரை கைது நீதிமன்றத்தில் உட்படுத்தி விசாரணை நடத்தி வருகிறோம்,கேரளா,ஆந்திர தொடர்ந்து தற்போது ஒரிசா மாநில போலீசாரும் கொள்ளை கும்பல் குறித்து தகவல் கேட்டுள்ளனர். தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நிகழ்ந்த ஏடிஎம் கொள்ளை தொடர்பாக இவர்களுடைய தடயங்களை போலீசார் சேகரித்து சென்றுள்ளனர்,கிருஷ்ணகிரி சம்பவத்தில் தொடர்புடைய இருக்கிறார் களா,கிருஷ்ணகிரி போலீசார் விசாரணையில் தெரிய வரும் என்றார்.இதில் தொடர்புடைய நபர்கள் மேல் ஒருசிலர் மீது நான்கு வழக்குகள் மற்றும் மற்றவர்கள் மீது ஒருசில வழக்குகள் உள்ளதாக கூறினார். இந்த சம்பவத்தினை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் ஏடிஎம் பாதுகாப்பு உபகரணங்களான சிசிடிவி,அலாரம் போன்ற கருவிகள் முறையாக இயக்கத்தில் உள்ளதா என்று பார்க்க மாவட்ட காவல்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதனை தொடர்ந்து பேசிய எஸ்பி ராஜேஷ் கன்னா ஒரு சில ஏடிஎம் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சிறைக்கு அனுப்பிய பிறகு தேவைப்பட்டால் காவல்துறை தரப்பில் மீண்டும் போலீஸ் கஷ்டியில் எடுக்கப்படும் என்றார், நமது வழக்குகளில் முதலில் கைது செய்து விடுவோம் அதே நேரத்தில் கேரள போலீசார் கஷ்டிஎடுப்பது என்பது அவர்கள் விருப்பம், கைது செய்த வடமாநில கும்பலிடம் இருந்து ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றவில்லை என கூறினார்.கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 67லட்சம் ரூபாய் பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருக்கிறோம், இந்த கும்பல் கேங்காக செயல்பட்டார்கள் என்று சொல்ல முடியாது,ஹரியானா மாநிலத்தில் இரண்டு மூன்று மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.கேரள போலீசார் தகவலின் அடிப்படையில் தான் இந்த கும்பலை பிடிக்க மாவட்ட காவல்துறை ஈடுபட்டதுஇந்த கண்டெய்னர் லாரி மட்டும் சோதனைக்கு உட்படுத்த முயன்ற போது வாகனம் நிற்காமல் சென்றதில் சந்தேகம் ஏற்பட்டது, மேலும் இந்த கும்பலில் யாரும் தலைவர் என்று சொல்ல முடியாது ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்துள்ளதாக நாமக்கல் எஸ்பி ராஜேஷ் கன்னா தெரிவித்தார்...