உலக பெருங்கடல் தினம் விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு காவிரி ஆற்றில் தூய்மை பணி.
உலக பெருங்கடல் தினம் விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு காவிரி ஆற்றில் தூய்மை பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்.
பரமத்தி வேலூர் செப்,27: உலக பெருங்கடல் தினம் விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு காவிரி ஆற்றில் தூய்மை பணியில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கந்தசாமிக் கண்டர் கல்லூரி, பிஜிபி கல்லூரி, தேசிய மாணவர் விமான படை மாணவர்களும் மாணவிகளும் மற்றும் வேலூர் அரிமா சங்கம் இணைந்து நடத்திய உலக பெருங்கடல் தினம் விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியாக வேலூர் பேருந்து நிலையம் முதல் காவிரி ஆற்றங்கரை வரை ஊர்வலமாக கையில் பதாகை ஏந்தி சென்றனர். அதனைத் தொடர்ந்து வேலூர் பேருரட்சி துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் மாணவர்கள் அனைவரும் காவிரி ஆற்றங்கரையில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். இந்நிகழ்ச்சியை வேலூர் அரிமா சங்கம் முன்னாள் தலைவர் மோகன் துவக்கி வைத்தார். வேலூர் பேரூராட்சி தலைவி லட்சுமி முரளி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். முனைவர் மு. கிருஷ்ணராஜ், முனைவர் சரவணன் மு சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.