தூய மடு ஜெபமாலை அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி தாளமுத்துநகர் தூய மடு ஜெபமாலை அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
தூத்துக்குடி தாளமுத்துநகர் தூய மடு ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 45 ஆம் ஆண்டு திருவிழாக்கான விழா நேற்று (செப்.27ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைமாவட்ட பொருளாளர் பிரதீப் கொடியேற்றி திருப்பலிக்கு தலைமை வகித்தார். மறைமாவட்ட தலைமை செயலர் அண்டனி ஜெகதீசன் மறையுரை வழங்கினார். விழாவில், இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவிழாவில் தினமும் காலை 10.30 மணிக்கு ஒவ்வொரு ஊர்களின் திருயாத்திரை திருப்பலி நடைபெறும் முக்கிய நிகழ்வான நற்கருணை பவனி 9 ஆம் திருவிழா அக்.5 சனிக்கிழமை இரவு மறைமாவட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் நடைபெறும். திருவிழா மாலை ஆராதனை ஞாயிறு மாலை மறைமாவட்ட முதன்மை குரு ஜான்பென்சன் தலைமையில், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கள்ளிக்குளம் மணிஅந்தோணி ஸ்னோஸ் மறையுரை ஆற்றுகிறார். அக்.7ம் தேதி திங்கள்கிழமை திருவிழா கூட்டுத்திருப்பலி முன்னாள் மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில், மன்னின் மைந்தர் ஜோசப் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு சப்பரபவணி நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள் நெல்சன்ராஜ், பாலன், திரு இருதய அருட்சகோதரிகள், ஊர் நிர்வாகிகள், அன்பியங்கள் பக்தசபைகள், மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.