நாமக்கல் : டிஜிட்டல் சர்வே முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஏஓக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

இந்த ஆர்ப்பாட்டத்தில், இரு சங்கங்களின் நிர்வாகிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.

Update: 2024-10-01 07:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆர்.லட்சுமி நரசிம்மன், மாவட்ட தலைவர் முத்துசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் குமார், அமைப்பு செயலாளர்கள் தமிழ்செல்வன், பிரபா, குணசீலன், நந்தகுமார், ராஜ்குமார், தினேஷ்குமார், நல்லியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், மற்ற துறை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மீது திணிக்கக் கூடாது. கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஜனவரி 8–இல் நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடுகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை புறக்கணிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஏற்கெனவே, கடந்த மாதம் வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் (செப்டம்பர் 30) மூன்றாம் கட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளுக்கு தீர்வு காணாத பட்சத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், இரு சங்கங்களின் நிர்வாகிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.

Similar News