வேளாண் துறையின் மானிய திட்டங்களை விவசாயிகள் அறிந்து கொள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அழைப்பு.
வேளாண் துறையின் மானிய திட்டங்களை விவசாயிகள் அறிந்து கொள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அழைப்பு.
வேளாண் துறையின் மானிய திட்டங்களை விவசாயிகள் அறிந்து கொள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அழைப்பு. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கரூரை அடுத்த ஆண்டாங் கோவில் மேற்கு ஊராட்சியில் உள்ள மொச்ச கொட்ட பாளையம் வேளாண் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்துறை உதவி பொறியாளர் ராம்குமார், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் பொறுப்பு சக்கரவர்த்தி, ஊராட்சி செயலர் பழனிச்சாமி உள்ளிட்ட கிராம பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராமத்தின் வளர்ச்சி குறித்தும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் பொதுமக்கள் எழுப்பிய கேள்விக்கு அதிகாரிகள் உரிய பதிலை அளித்தனர். மேலும், இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள், ஜல்ஜீவன் இயக்கம், குழந்தை தொழிலாளர் இல்லாத பஞ்சாயத்துக்களாக அறிவித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி ஏற்றல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வேளாண் துறை பொறியாளர் ராம்குமார் தெரிவிக்கும் போது, வேளாண் பொறியியல் துறையில், விவசாயிகளுக்கு பல்வேறு மானியத் திட்டங்கள் உள்ளது. அதனை பயன்படுத்திக் கொள்ள வேளாண் துறை அலுவலகத்தை அணுகி, அந்த திட்டத்தின் பயன்களை பெறுமாறு அழைப்பு விடுத்தார். கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் ஊராட்சி செயலர் பழனிச்சாமி நன்றி தெரிவித்தார்