அணைப்பாளையம் ஊராட்சி- சிறப்பு கிராம சபை கூட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்.

அணைப்பாளையம் ஊராட்சி- சிறப்பு கிராம சபை கூட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்.

Update: 2024-10-02 11:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அணைப்பாளையம் ஊராட்சி- சிறப்பு கிராம சபை கூட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கல். கரூர் மாவட்டம் கா பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணைப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமரப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மூர்த்தி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, ஊராட்சி செயலர் பொறுப்பு சுமதி, பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மூர்த்தி ஊராட்சியில் பணிபுரியக்கூடிய துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். சீருடைகளை பெற்றுக் கொண்ட அவர்கள் தமிழக அரசுக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

Similar News