புத்தகங்கள் மனிதரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம்.

புத்தகங்கள் மனிதரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம்.

Update: 2024-10-03 14:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புத்தகங்கள் மனிதரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம். கரூரில் உள்ள தனியார் கூட்டு அரங்கில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி மேயர் கவிதா உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் மாணவ மாணவியர் என ஏராளமான கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய மாவட்ட ஆட்சியர் தங்கவேல், புத்தகங்கள் ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும், புத்தகங்கள் வாயிலாக கல்வி கற்பவர்கள் சமுதாயத்தில் சிறந்தவர்களாகவும், பிற்காலத்தில் சமுதாயத்தில் முக்கியஸ்தர்கள் ஆகவும், அரசுத்துறை அதிகாரிகளாகவும் மாறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது. தமிழக அரசு நூலகத்துறை மூலம் பல்வேறு அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகளை அளித்து வருகிறது. போட்டியை முறையாக எதிர்கொண்டு வெற்றி பெறுபவர்கள் அரசு துறையில் பணியாற்றிடும் வாய்ப்புகள் பெறுவார்கள் என்றார்.

Similar News