ஆண்டிபட்டி அருகே சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
அரப்படித்தேவன் பட்டி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் சாக்கடை வசதி இல்லை
ஆண்டிபட்டி அருகே குன்னூர் ஊராட்சியை சேர்ந்த அரப்படித்தேவன்பட்டியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்காமல் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தெருவில் தேங்கியுள்ள கழிவுநீரில் இறங்கிநின்று ஜல்லிகற்கள் ஏற்றிவந்த லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம் தேனிமாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த குன்னூர் பஞ்சாயத்தை சேர்ந்த கிராமம் அரப்படித் தேவன்பட்டி.இக்கிராமத்தில் உள்ள வடக்குதெரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகின்றனர்.இப்பகுதி உருவாகி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படவில்லை.இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தெருக்களி தேங்கி பெரும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவதோடு ,காய்ச்சல் தோல்நோய், மஞ்சள் காமாலை வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பலவித தொற்று நோய்களையும் பரப்பி வருகிறது.இதுகுறித்து பலமுறை இப்பகுதி மக்கள் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கக்கோரி குன்னூர் ஊராட்சி நிர்வாகம்,ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்,மற்றும் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும்,இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் தற்போது கழிவுநீர் தெருக்களில் குளம்போல் தேங்கியுள்ளது.இந்நிலையில் அரப்படித் தேவன்பட்டி வடக்கு தெருவில் புதிதாக சாலை அமைப்பதற்கு தேனி மாவட்டம் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று ஜல்லிகற்களை ஏற்றிய லாரிகள் மற்றும் இயந்திரங்கள் சாலை அமைக்கும் பணிக்காக இப்பகுதிக்கு வந்தன.ஏற்கனவே கழிவுநீர் தெருவில் குளம்போல் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வரும் நிலையில் .கழிவு .நீர் வாய்க்கால் அமைக்காமல் சாலை போடுவதற்காக வந்ததை அறிந்த இப்பகுதி மக்கள் கொந்தளிப்படைந்தனர் இதையடுத்து சாலை அமைக்க வந்த ஜல்லிக்கர்கள் லாரியை இடைமறித்த அவர்கள் கழிவுநீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர் கழிவுநீர் வாய்க்கால் அமைக்காமல் சாலை அமைக்க விடமாட்டோம் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அரப்படிதேவன்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் கழிவுநீர் வாய்க்கால் அமைத்த பின்பே சாலை போட விடுவோம் என பொதுமக்கள் உறுதியாக கூறியதால் பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் அரப்படித் தேவன்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது