பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மலை தேனீக்கள் விரட்டியடிப்பு.

பாண்டமங்கலம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மலைத்தேனீக்கள் விரட்டியடிப்பு.

Update: 2024-10-05 14:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்திவேலூர்,அக்.5- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா,  பொன்மலர்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(50) விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள  தென்னந்தோப்பில் இருந்த ஒரு தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இந்த மலைத் தேனீக்கள் அந்த வழியாக வ சென்று வந்தவர்களையும், அருகாமையில் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பொதுமக்களையும்  கடித்து அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விவசாயி ரமேஷ்குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர்  தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த மலை தேனீக்கள் மீது தண்ணீரை பீச்சி அடித்து மலை தேனீக்களை விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Similar News