புதுக்கோட்டை நகரியத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லெட்சுமி நகர், பாரி நகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக் கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லெணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் க. அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.