திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் ராஜீவ் காந்திநகர் குடியிருப்போர் விரிவாக்க நலச்சங்க கூட்டம் நேற்று தலைவர் மாரியப்பன், செயலாளர் டேனியல் ஆசீர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக செய்து தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.